மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

குவாரி அமைக்க தடையில்லாச் சான்று!

குவாரி அமைக்க தடையில்லாச் சான்று!

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குவாரிகள் அமைப்பது குறித்து தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்துக்கு உட்பட்ட 5 இடங்களில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கி நெல்லை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, பூதநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 11) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வன விலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு வனப்பகுதியில் குவாரி அமைக்க தேசிய வனவிலங்கு வாரியம், சுற்றுசூழல் பாதுகாப்பு மண்டல வாரியத்திடம் அரசு தடையில்லாச் சான்று பெற வேண்டும். தடையில்லாச் சான்று பெற்ற பிறகே ஒப்பந்த அறிவிப்பாணையை அரசு வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon