மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

பிக் பாஸ் பிரபலங்களுக்கு சிம்பு ‘மந்திரம்’!

பிக் பாஸ் பிரபலங்களுக்கு சிம்பு ‘மந்திரம்’!

பிக் பாஸிலிருந்து வெளியேறியுள்ள நடிகர்கள் செண்ட்ராயன் மற்றும் மஹத் ஆகியோர் நடிகர் சிம்புவைச் சந்தித்துள்ளனர்.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக் பாஸ்’ இரண்டாவது சீஸனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பல நபர்களுள் நடிகர்கள் செண்ட்ராயனும் மஹத்தும் அடங்குவர். கடந்த சீஸனில் இடம்பெற்ற ஆரவ்-ஓவியா இடையேயான நிகழ்வுகளையொத்ததாக அமைந்திருந்தன இந்த சீசனில் மஹத் மற்றும் யாஷிகா இடையேயான நிகழ்வுகள்.

அதேபோல கடந்த சீஸனில் வெள்ளந்தி மனிதரைப்போல வலம்வந்து ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த நடிகர் கஞ்சா கருப்புவை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது இந்த சீஸனின் போட்டியாளரான செண்ட்ராயனின் நடவடிக்கைகள். முன்னதாக இந்த சீஸனிலிருந்து மஹத் வெளியேற்றப்பட்ட நிலையில் செண்ட்ராயனும் தற்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட இருவரும் நடிகர் சிம்புவைத் தற்போது சந்தித்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹத், “எனது சிறந்த நண்பரான சிம்பு, சக பிக் பாஸ் போட்டியாளரான செண்ட்ராயனை வரவேற்று வாழ்த்தியுள்ளார். வீட்டிற்குத் திரும்பியிருக்கும் செண்ட்ராயனை வரவேற்கிறேன்” எனும் தொனியில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தில் திருமந்திரம் புத்தகத்தை சிம்பு செண்ட்ராயனுக்கு வழங்குவதுபோல உள்ளது. அத்துடன், “அன்புடன் எஸ்.டி.ஆர்” எனும் வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.

மூவரும் தற்போது நெருக்கமாகியுள்ள நிலையில் இந்த கூட்டணி விரைவிலேயே ஏதாவது ஒரு படத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கலாம்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon