மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

நெட்வொர்க் பிரச்னைகளை சீராக்கும் ஏர்டெல்!

நெட்வொர்க் பிரச்னைகளை சீராக்கும் ஏர்டெல்!

தொலைத் தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பாரதி ஏர்டெல் நிறுவனம், தமிழகத்தில் நெட்வொர்க் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2.3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் மீது சமீப காலமாக அதன் நெட்வொர்க் தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் நெட்வொர்க் தொடர்பான கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் வாய்ஸ் கால்களில் நெரிசல்களைக் கொண்ட 3ஜி நெட்வொர்க் சேவை உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் தமிழக மற்றும் கேரளா பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மனோஜ் முரளி வெளியிட்டிருந்த அறிக்கையில், "4ஜி சேவை மேம்படுத்தப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால்களில் உயர் ரக குரல் தெளிவு கொண்ட VoLTE சேவையைப் பயன்படுத்தலாம். தற்போது பெருகிவரும் 4ஜி ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொண்டு வாய்ஸ் கால்கள் மற்றும் இணையச் சேவைகளை வழங்க முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளோம். ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதிவேக இணையச் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சிறந்த கால் சேவையை எங்கள் வாடிக்கையாளர்கள் உபயோகித்து வருகிறார்கள்" இவ்வாறு கூறியிருந்தார்.

Project Leap திட்டத்தின் கீழ் 12,000 இடத்தில் சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதிக்கும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon