மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

10ஆம் வகுப்புத் தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்கலாம்!

10ஆம் வகுப்புத் தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று (செப்டம்பர் 12) முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க வேண்டிய நாள்களை,தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கடலூர், வேலூர், சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் ஒதுக்கப்படும்.

தேர்வுக் கட்டணம் ரூ.125, கூடுதலாகச் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675யை பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon