மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

மின்னணு வர்த்தகத்துக்கு ஆலோசனைக் கூட்டம்!

மின்னணு வர்த்தகத்துக்கு ஆலோசனைக் கூட்டம்!

இ-காமர்ஸ் துறைக்கான வரைவுக் கொள்கை குறித்து விவாதிக்க செப்டம்பர் 13ஆம் தேதி முதல் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் செயலாளர் தலைமையில் செப்டம்பர் 13ஆம் தேதி இ-காமர்ஸ் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்குழுவில் உள்ள அனைத்துச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இ-காமர்ஸ் வரைவு அறிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகத் துறை செயலாளர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், பொருளாதார விவகாரங்கள் துறை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரைவறிக்கையில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பரிந்துரைப்பார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் துறைகளில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதில் மாற்றம், ஆன்லைன் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon