மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

முன்பே சிவக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’!

முன்பே சிவக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’!

மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் செக்கச்சிவந்த வானம்.

ரசிகர்கள் மட்டுமல்லாது வழக்கம்போலவே சினிமா துறையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் முன்னதாக நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியிடப்பட்டுள்ள இதன் இரண்டு பாடல்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியானது, செப்டம்பர் 28 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி முன்பு சொல்லப்பட்ட தேதிக்கும் ஒருநாள் முன்பாகவே அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியே இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. பா.இரஞ்சித் தயாரிப்பில் வரும் பரியேறும் பெருமாள் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon