மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இண்டர்போல் பிடியில் மோடியின் சகோதரி!

இண்டர்போல் பிடியில் மோடியின் சகோதரி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு இண்டர்போல் (சர்வதேச குற்றவியல் காவல் துறை அமைப்பு) ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவருக்கும் இந்தக் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளது. 44 வயதான இவர் பெல்ஜியம் நாட்டில் தற்போது இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

அமலாக்கத் துறையின் பரிந்துரையின் பேரில் இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பூர்வி மோடியின் பெயர் இந்த வழக்கில் முதன்முதலாக மார்ச் மாதத்தில் இணைக்கப்பட்டது. இவருக்கு ஆங்கிலம், குஜராத்தி மற்றும் இந்தி ஆகிய மொழிகள் தெரியுமென்றும் ரெட் கார்னர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் உத்தரவானது சர்வதேச அளவிலான பிடிவாரண்டாகும். இதன்படி எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கைது செய்ய இண்டர்போல் அமைப்புக்கு அதிகாரம் உண்டு. சுமார் 192 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

முன்னதாக நீரவ் மோடியின் முன்னணி நிர்வாகி மிஹிர்.ஆர்.பன்சாலிக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon