மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

‘சர்கார்’ புதிய அப்டேட்!

‘சர்கார்’ புதிய அப்டேட்!

சர்கார் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வரலட்சுமி அறிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வரலட்சுமி படங்களில் நடிப்பதோடு அந்தந்த படங்களின் மக்கள் தொடர்பாளர் பணியையும் சேர்த்துக் கவனிக்கிறாரோ என்று நினைக்கும் அளவிற்கு ஒவ்வொரு படத்தின் பணிகளும் எந்த அளவு உள்ளன என்பதை அறிவித்துவருகிறார். தற்போது சர்கார் படத்தில் அனைத்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்ததாகக் கூறி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வரலட்சுமி தனது பதிவில், “சர்கார் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. அருமையான, இனிமையான இயக்குநருடன் பணியாற்றியுள்ளேன். எப்போதும் அமைதியாக இருக்கக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஆகியோரை ‘டேக்’ செய்து உங்களுடனான பயணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon