மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

சைதாப்பேட்டை கட்டட விபத்து: 2 பேர் பலி

சைதாப்பேட்டை கட்டட விபத்து: 2 பேர் பலி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானப் பணியின்போது, 10ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாயினர்.

சென்னை மாநகரில் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று கட்டப்பட்டுவருகிறது. பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டுவரும் இந்தக் கட்டடத்தில், இன்று (செப்டம்பர் 11) 10ஆவது மாடியில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. இதில் ஈடுபட்டு வந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பிரவீன், கோவிந்தன் ஆகிய இருவர், கீழே தவறி விழுந்தனர்.

இந்த விபத்தில், இருவரும் உயிரிழந்தனர். சைதாப்பேட்டை போலீசார் இவர்களது சடலங்களைப் பிரேதப் பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த இருவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon