மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஹைதராபாத்தில் மையமிட்ட விஸ்வாசம் டீம்!

ஹைதராபாத்தில் மையமிட்ட விஸ்வாசம் டீம்!

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார். இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு மாதம் தொடர்ந்து நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் மீதமுள்ள அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன. பின்னர் ‘பேட்ச் ஒர்க்’ என்று சொல்லப்படும் சில ஷாட்கள் மட்டும் எடுக்கப்படும்.

அதைத் தொடர்ந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித் மதுரை வட்டார மொழியில் வசனங்கள் பேசி நடிக்கிறார். அஜித் நடித்து வெற்றிபெற்ற ரெட் திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் அந்தப் படத்தில் அவர் வட்டார மொழியைப் பேசி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் டீசர், ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ஜனவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon