மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஜிஎஸ்டி: விநியோகர்களுக்கும் அபராதம்!

ஜிஎஸ்டி: விநியோகர்களுக்கும் அபராதம்!

சரக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும்போது, அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்காத விநியோகர்களும் அபராதம் செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா டிரேடிங் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் National Anti Profiteering Authority-NAA இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில், வேஸ்லின் சரக்குகளின் விலையை ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ப விநியோகர் திருத்தியமைக்கவில்லை என்றும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் பிரிவு 171ன் கீழ் கூடுதல் லாபமீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஒரு பல்பொருள் அங்காடி தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விசாரணை தொடரப்பட்டது.

வேஸ்லினுக்கான ஜிஎஸ்டி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்ட பிறகு, வரிக் குறைப்பின் பலன்கள் விநியோகரால் பல்பொருள் அங்காடிக்கு வழங்கப்படவில்லை என்று இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. National Anti Profiteering Authority-NAA அமைப்பின் 24 பக்க உத்தரவில், மத்திய ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 122ன் கீழ் சர்மா டிரேடிங் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி அந்நிறுவனம் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon