மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 1 ஏப் 2020

நிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு!

நிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு!

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதிச் செலவுகள் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் 76 சதவிகிதம் அளவு மின்னுற்பத்தி ஆலைகளின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் சமீப காலமாகவே உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருவதால், இறக்குமதி ஓரளவுக்குக் குறைக்கப்பட்டு வருகிறது. 2009-10 முதல் 2014-15 வரையில் மின்னுற்பத்தி ஆலைகளின் நிலக்கரி இறக்குமதி 22.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.2.52 லட்சம் கோடி மதிப்பிலான 380 மில்லியன் டன் அளவு நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்யும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், 208 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடியாகும்.

2010-11 முதல் 2014-15 வரையில் நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்குச் சராசரியாக 10 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் 56.41 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி குறைந்துள்ள அதேவேளையில், 2014-15 முதல் 2017-18 வரையில் உள்நாட்டில் 110 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி 31 மில்லியன் டன் மட்டுமே. எனவே, இந்தியா தனது நிலக்கரி இறக்குமதிச் செலவில் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைத்துள்ளது. இந்த விவரங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon