மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

30 லட்சம் அபாச்சி பைக் விற்பனை!

30 லட்சம் அபாச்சி பைக் விற்பனை!

30 லட்சம் அபாச்சி மாடல் பைக்குகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், 2005ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 30 லட்சம் அபாச்சி மாடல் பைக்குகள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிவிஎஸ் இருசக்கர வாகனங்களில் அபாச்சி மாடல் பைக் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விற்பனையில் தற்போது சாதனை படைத்துள்ளோம். எங்களுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அபாச்சி மாடலில் இதுவரையில் 30 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அபாச்சியின் ஈடு இணையற்ற அனுபவம், முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் அழகான வடிவமைப்பு போன்றவைதான் இந்தச் சாதனைக்குக் காரணமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அபாச்சி மாடலில் 160 சிசி மற்றும் 310 சிசி திறன் கொண்ட பைக்குகள் வெளியாகி வருகின்றன. இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.586.90 ஆக உள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon