மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

மோகன் ராஜாவை முந்திய குறும்பட இயக்குநர்!

மோகன் ராஜாவை முந்திய குறும்பட இயக்குநர்!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் தங்கவேல் எனும் அறிமுக இயக்குநர் இயக்கும் அடங்க மறு படத்தில் பிஸியாக இயங்கிவருகிறார் நடிகர் ஜெயம் ரவி. ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் விரைவிலேயே திரைக்குவர தயாராகி வருகிறது. இந்தப்படத்தையடுத்து, ஏற்கெனவே ஜெயம் ரவி- மோகன் ராஜா காம்பினேஷனில் வந்து வெற்றிபெற்ற ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயார் ஆகலாம் எனக் கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் அந்தப்படத்திற்கு முன்னதாக தற்போது மற்றொரு படத்தில் நடிப்பது என முடிவெடுத்துள்ளார் ஜெயம் ரவி. அவரது 24ஆவது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை 'அப்பா லாக்' (App(a) Lock) எனும் குறும்படம் வாயிலாக கவனம் ஈர்த்தவரான அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வேல்ஸ் ஃபில்ம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் இதைத் தயாரிக்கிறார்.

இந்த அறிவிப்பின் வாயிலாக தனி ஒருவனின் அடுத்த பாகம் ஜெயம் ரவியின் 25ஆவது படமாக தற்போது மாறியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon