மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

84 வயதாகும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கடந்த சில காலமாக சிறுநீரக பிரச்னை இருந்துவருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 10) இரவு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீறுநீரகத் தொற்று, மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தா.பாண்டியன் உடல்நிலை குறித்து தலைவர்கள் கேட்டறிந்துவருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூலை 28ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன், டயலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய, தா.பாண்டியன் தற்போது மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon