மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பெட்ரோலிய விலை உயர்வுக்குக் காரணம்?

பெட்ரோலிய விலை உயர்வுக்குக் காரணம்?

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வதற்கு சர்வதேசக் காரணிகள்தான் காரணம் என்று அசோசேம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாகவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதோடு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும், அவற்றை ஜிஎஸ்டி வரி வளையத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினரின் அதிர்வலைகளும் அதிகமாக உள்ளன. இருப்பினும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வெளிப்புறக் காரணிகள்தான் காரணம் என்று இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.

அசோசேம் பொதுச் செயலாளரான உதய் குமார் வர்மா இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அது இப்போது உடனடியாகச் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. சர்வதேசப் பொருளாதாரக் காரணிகள் வளர்ந்து வரும் நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. அதில் இந்தியா விதிவிலக்கல்ல. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. உலகின் பல நாடுகள் இப்பிரச்சினையைத் தற்போது எதிர்கொண்டுள்ளன. உலகளவில் ஆயில் இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவில் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon