மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சென்னையில் மிகப்பெரிய சரக்கு விமானம்!

சென்னையில் மிகப்பெரிய சரக்கு விமானம்!

சமீபத்தில் ஈராக்கிலிருந்து ஒன்றரை லட்சம் டன் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு சென்னை துறைமுகத்துக்கு நியூ டைமண்ட் என்ற மிகப்பெரிய சரக்குக்கப்பல் வந்தது. அதேபோல, நேற்று (செப்டம்பர் 10) உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமொன்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த வோல்கா – டிஎன்இபிஆர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானம் 53.46 டன் சரக்குடன் சென்னைக்கு வந்திறங்கியது. சீனாவின் ஜியாங் நகரில் இருந்து பிரமாண்டமான கருவிகள் இதில் கொண்டுவரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானமொன்று தரையிறங்குவது இதுவே முதன்முறை. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகச் சென்னை இருப்பதால், இனிமேல் பெரிய ரக சரக்கு விமானங்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் 69.1 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகள் மட்டும் 73.3 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரமாண்ட உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள், தொழிற்சாலைக் கருவிகளைக் கொண்டு செல்ல இந்த விமானம் ஏற்றது. அதிகபட்சம் 150 டன் சரக்குகளை இதில் கொண்டு செல்ல முடியும். 1982ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, 55 AN-124 ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது அவற்றில் சில விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

உலகில் மிகப் பெரிய சரக்கு விமானமாக An-225 Mriya கருதப்படுகிறது. இது 280 டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் திறன் படைத்தது. 1980ஆம் ஆண்டு இந்த ரக விமானம் ஒன்றே ஒன்று தயாரிக்கப்பட்டது. தற்போது வரை An-225 Mriya பயன்பாட்டில் உள்ளது. இதுவும் ரஷ்யத் தயாரிப்பு தான்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon