மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

‘சாமி’யை நினைவூட்டும் சாமி ஸ்கொயர்!

‘சாமி’யை நினைவூட்டும் சாமி ஸ்கொயர்!

நடிகர் விக்ரம், இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 10) வெளியாகியுள்ளது.

கச்சிதமான திரைக்கதையுடன் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற சாமி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற தலைப்பில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்களிடையே படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்த நிலையில் நேற்று அதன் இரண்டாம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே வெளியான இந்தப் படத்தின் பாடல், டீசர், முதல் ட்ரெய்லர் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் இம்மாதம் வெளியாவதை முன்னிட்டு, அதன் இரண்டாம் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். முதல் பாகத்தில் இடம்பெற்று பிரசித்திப்பெற்ற வசனமான ஒரு சாமி, இரண்டு சாமி... ஆறுசாமி, போலீஸ் இல்ல பொறுக்கி போன்ற வசனங்களும் மீண்டும் நினைவூட்டும் வகையில் இதிலும் இடம்பெற்றிருக்கிறது. ‘திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலை கோட்டைடா’ பாடல் போன்றே ‘ஒண்ணா பொறந்த ஊருல எவனும் இன்னும் மாறல’ என்ற பாடலின் இசை, காட்சி அமைந்திருக்கிறது. வில்லன் பாபி சிம்ஹா பேசும் ‘பத்து தலைக் கொண்ட அரக்க வம்சம்டா’ என்ற வசனம் கவனம் பெறுகிறது.

துருதுரு பெண்ணாக கீர்த்தியும், பொறுப்பான பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷும் வருகிறார்கள். இதில் ஒன்றே ஒன்று மட்டும் மாறுபட்டிருக்கிறது. எப்போதும் மேலேயே சுற்றும் கேமரா கோணம் இதில் வேறுபட்டிருக்கிறது. மற்றபடி ஆக்‌ஷன் கலந்த மசாலாவாக வழக்கமான ஹரி படமாக இந்தப் படமும் இருக்கும் என்பதை ட்ரெய்லர் பார்ர்கும்போது தெரிகிறது.

சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon