மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பாபர் மசூதி வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க உத்தரவு!

பாபர் மசூதி வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க  உத்தரவு!

பாபா் மசூதி வழக்கை வரும் 2019க்குள் முடிக்குமாறு உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசின் முறையீடு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் லக்னோ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ்வின் பதவி உயர்வு தாமதமாகி வருகிறது. ஏனெனில் பாபர் மசூதி வழக்கை லக்னோ நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று லக்னோ நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரு ஆண்டுகளுக்குள் பாபர் மசூதி வழக்கை முடிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கை நீதிமன்றம் எப்படி 2019க்குள் முடிக்க போகிறது என்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒரு சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் உத்தரவில் கூறியுள்ளது.

2017 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பாஜகவின் முக்கிய தலைவர்களான அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் பாபர் மசூதி வழக்கில் சதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் அந்த வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க லக்னோ நீதிமன்றம் நாள்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon