மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

ஷகீலா படத்துக்காக மெனக்கெடும் நடிகர்!

ஷகீலா படத்துக்காக மெனக்கெடும் நடிகர்!

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக நடிகர் பங்கஜ் திரிபாதி மலையாளம் கற்று வருகிறார்.

தேசிய விருது பெற்ற நியூட்டன் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பங்கஜ் திரிபாதி. காலாவில் ரஜினியுடன் எஸ்ஐ ஆக நடித்திருப்பார். அவர் நடிகை ஷகீலாவின் வாழ்க்கைச் சித்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தென்னிந்திய நடிகராக நடிப்பதில் இது அவரது முதல் முயற்சி. பயோபிக் வகையைச் சேர்ந்த இந்தத் திரைப்படத்தில் ஷகீலாவாக நடிக்கவிருக்கிறார் ரிச்சா சதா எனும் இந்தி நடிகை. இவர்களுடன் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடிக்கிறார்.

ஷகீலா அடிப்படையில் ஒரு மலையாள நடிகை என்பதால், அவரது கதையை திரைப்படமாக்குகையில் இந்தி நடிகர்களின் திரைமொழி மலையாள மண் வாசத்துடன் ஒட்டாமல், தனித்துத் தெரிய கூடாது என்பதற்காக தற்போது பங்கஜ் திரிபாதி மலையாளம் கற்று வருகிறார். மலையாள நடிகர்கள் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கும் டிவிடிக்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களது மலையாள உச்சரிப்பைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறார்.

இந்திரஜித் லங்கேஷ் இயக்கி வரும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon