மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

கருணைக் கொலை: மருத்துவர் குழு நியமனம்!

கருணைக் கொலை: மருத்துவர் குழு நியமனம்!

தனது மகனைக் கருணைக் கொலை செய்யக் கோரி திருமேனி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், அச்சிறுவனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

வலிப்புநோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தனது 10 வயது மகனை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு, சிறுவனைப் பரிசோதனை செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவைப் பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தது.

குழந்தைகள் நரம்பியல் துறை சார்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் திலோத்தம்மாள், ஸ்டான்லி மருத்துவமனை இயக்குநர் டி.ரவிச்சந்திரன், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் பாலராமசந்திரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிறுவனைப் பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ நிபுணர் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா அல்லது இதே நிலையில் தான் இருப்பாரா என்று தெளிவுபடுத்த வேண்டுமென்று கூறினர். அவரைக் கவனிக்கத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அல்லது அரசோ விரும்புகிறதா என்று அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon