மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

மீச்சிறு காட்சி 9: ஒரு துளி கடல்!

மீச்சிறு காட்சி 9: ஒரு துளி கடல்!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

பொதுவாக மினிமலிசம் காட்சி வடிவம் சார்ந்த கலைகளான ஓவியம் முதல் கட்டட வடிவமைப்பு வரை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம். இலக்கியத்தில், கதைசொல்லலில் மினிமலிசத்தின் பங்கு என்ன என்பதைப் பார்க்கலாம்.

“குறுகத்தரித்த குறள்” என்று சொல்லப்படுகிற திருக்குறளே அதற்கு உதாரணம். விரிந்த பொருள் தரும் விஷயங்களை ஏழு சீர்களும் இரண்டு அடிகளும் கொண்ட செய்யுள்களுக்குள் சுருக்கித் தருவது மினிமலிசம்தான் அல்லவா. அதன் மினிமலிசத் தன்மையைச் சுட்டும் விதத்தில் “ஈரடி நூல்” என்னும் பெயர்கூடத் திருக்குறளுக்கு உண்டு.

நமது மரபின் அறிவு விளையாட்டுகளில் ஒன்றான விடுகதைகள் மினிமலிசத்தன்மை கொண்டவை. மிகச் சுருக்கமாக இயற்கை சார்ந்த, நிலம் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த அறிவை உருவகமாகவோ, உவமையாகவோ கேள்விகளுக்குள் கொண்டுவரும் அற்புதம் அது. ‘நறுக்குத் தெறித்தால் போல்’ என்று போகிறபோக்கில் சொல்வோம் இல்லையா. அந்த நறுக்கு என்பது மினிமல்தான்.

ஹைக்கூ கவிதைகள் இன்னோர் உதாரணம். ஜென் தத்துவத்தைப் பின்புலமாகக்கொண்ட ஹைக்கூ வடிவக் கவிதைகள் ஒவ்வொன்றும் எழுத்தில் வடிக்கப்பட்ட மினிமலிச வாட்டர் கலர் ஓவியம் போன்றவை. ஹைக்கூக்கள் சொற்களால் எழுதப்பட்டவை என்பதை விடச் சிறு சிறு காட்சிகளால் வரையப்பட்ட கவிதைத் துளிகள் போன்றவை. அவை வாசிப்பவரின் மனப்பரப்பில் நொடி நேர மினிமலிச ஓவியத்தை வரைந்து அழிப்பவை. ஜென் கதைகளில் கூடப் பெரிய பெரிய வாழ்வியல் தருணங்களை தத்துவங்களைச் சிறிய சிறிய சம்பவங்களின், புதிர்களின் வழியாக எளிய வடிவத்தில் சொல்லும் உத்தியைக் காணலாம். பொதுவாகவே ஜப்பானியர்களின் கலை வடிவங்களில் ஒரு மினிமலிசத்தன்மை மரபாகவே உள்ளது.

சமீபத்தில் ஹருகி முரகாமியின் ஒரு கதை (மொழிபெயர்ப்பில் ) படித்தேன். “நகரும் சிறுநீரக வடிவக் கல்” என்பது கதையின் தலைப்பு. இந்தத் தலைப்பே ஒரு வகையில் மினிமலிச ஓவியம் போல இருக்கிறது. முரகாமியின் பெரும்பாலான சிறுகதைகள் மினிமலிசப் பாணிக்கு ஒத்துப்போகக் கூடியவை. குறைவான கதாபாத்திரங்கள், நீட்டி முழக்காமல் மின்னல்போல வெட்டிச்செல்லும் கதை சொல்லல் முறை ஆகியவை. முரகாமியின் ஜப்பானியப் பின்புலத்தையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மேற்கத்திய எழுத்தில் மினிமலிசம் என்றால் அதற்குச் சரியான உதாரணமாக எனக்குச் சட்டென்று தோன்றுவது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’. அதன் சுருக்கமான கதை சொல்லல் முறையும், சண்டியாகொ, மனோலின் என்று குறைவான கதாபாத்திரங்களும் மினிமலிசப் பாணியிலானவை என்றே சொல்லலாம்.

தமிழ் நவீன இலக்கியத்தில் மினிமலிசத்தின் இடம் என்ன என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. தமிழ் நவீனக் கவிதைகளுக்கு அந்த இடத்தை வழங்க முடியும். நவீனக் கவிதைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டதாலோ என்னவோ புனைவுகளில் மினிமலிசப் பாணியைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. மொழியை அடர்த்தியாக, சுருக்கமாக, சிக்கனமாகப் பயன்படுத்தும் தன்மையை சுந்தர ராமசாமியின் சில சிறுகதைகளில் நான் பார்க்கிறேன்.

தமிழின் தீவிர இலக்கியவாதிகள் ‘குறைவாக எழுதினால்தான் நல்ல இலக்கியம்’ என்கிற கொள்கையை எல்லாம் ஒரு காலத்தில் கொண்டிருந்ததாக அறிகிறேன். இருந்தும் மினிமலிசம் பற்றி யாரும் பேசாமல் போனது ஆச்சரியமே.

இரண்டாயிரத்துக்குப் பிறகான நவீன தமிழ் இலக்கியத்தில் தலையணை சைஸில் நாவல்கள், புத்தகங்களைப் போடுவதுதான் ஃபேஷன் என்றாகிப்போனதால், மினிமலிசம் இந்தத் தலையணைகளுக்குக் கீழே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் என்பதை யூகிக்கிறேன்.

இலக்கியத்தில் மினிமலிசம் பற்றி யாரேனும் சொல்லி இருக்கிறார்களா என்று நவீன தமிழ் இலக்கிய வரலாற்றைத் தோண்டித் துருவிப் பார்த்தால் “குறைத்துரைத்தலின் அழகியல்” என்று ஒரே ஒருமுறை ஜெயமோகன் மட்டும் அ.மார்க்ஸின் ஒரு கட்டுரையைப் பற்றி எழுதி இருக்கிறார்.

வெகுஜன எழுத்துகளில் சுஜாதாவிடம் சுருங்கச் சொல்லும் தன்மை இருந்ததைப் பார்க்கலாம். கணையாழியின் கடைசிப் பக்கங்களில் அவர் எழுதி வைத்திருக்கும் சின்னச் சின்னக் குறிப்புகள் ஓர் உதாரணம். மற்ற எழுத்தாளர்கள் நான்கு பக்கங்களுக்கு எழுதும் விஷயத்தை நான்கு வரிகளில் சட்டென்று சொல்லிச் செல்லும் மொழி நுட்பம் அவருக்கு வாய்த்திருந்தது. ஆனால், அவருடைய விளையாட்டுத்தனம் அவர் சொல்கிற விஷயங்களில் ஆழமின்மையை அளித்தது. மினிமலிசம் குறைவாகச் சொன்னாலும் ஆழமும் அடர்த்தியும் கொண்டதாக இருக்கும்.

இலக்கியத்தில் மினிமலிசம் என்பது சுகுமாரனின் கவிதை ஒன்றில் வரும் படிமம்போல, ‘கைப்பள்ளத்தில் அள்ளிய கடல்’.

(காண்போம்)

*

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon