மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி!

கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி!

தமிழகம் முழுவதிலுமிருந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக எம்.பி கனிமொழி தனது இல்லத்தில் உணவளித்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து கலைஞரின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 10) கலைஞர் நினைவிடத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த தவழும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி செலுத்தினர். அவர்கள் சிவகங்கை புஷ்ப ராஜ் தலைமையில் திமுக எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தனர். அவர்களை வரவேற்ற கனிமொழி அனைவருக்கும் தனது இல்லத்தில் உணவளித்து உரையாடினார்.

கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பான டிசம்பர் 3இயக்கத்தினர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அஞ்சலி செலுத்தினர். அவர்களுடனும் கனிமொழி உடனிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon