மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 17.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உலகின் மொத்த ஜிடிபியில் ஐந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமான அளவில் ஆசிய பசிபிக் நாடுகள் பங்கு வகிக்கின்றன. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி உலகின் மொத்த ஜிடிபியில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் பங்கு 42.6 விழுக்காடாக உள்ளது. இது 2000ஆம் ஆண்டில் 30.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது. ஆசிய பசிபிக் நாடுகளில் பங்குகள் அதிகரித்துள்ள அதேவேளையில், வட அமெரிக்காவின் பங்குகள் 6.8 விழுக்காடும், ஐரோப்பிய நாடுகளின் பங்குகள் 4.7 விழுக்காடும், தென் அமெரிக்க நாடுகளின் பங்குகள் 1.3 விழுக்காடும், மற்ற எஞ்சிய பகுதிகளின் ஜிடிபி பங்குகள் 0.3 விழுக்காடும் சரிந்துள்ளன.

ஆசிய மற்றும் பசிபிக் பகுதியின் மிகப்பெரிய பொருளாதார பலம் வாய்ந்த நாடாகச் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் விளங்குகின்றன. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி இப்பகுதியின் ஒட்டுமொத்த ஜிடிபியில் இந்த 3 நாடுகளும் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளன. இது 2000ஆம் ஆண்டில் 63 விழுக்காடாக மட்டுமே உள்ளது. குறிப்பாகச் சீனா 42.7 விழுக்காட்டுப் பங்கையும், இந்தியா 17.3 விழுக்காட்டுப் பங்கையும், ஜப்பான் 10.2 விழுக்காட்டுப் பங்கையும் கொண்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் சீனாவின் பங்கு 25.1 விழுக்காடாகவும், இந்தியாவின் பங்கு 14.6 விழுக்காடாகவும் இருந்தது. ஆனால் ஜப்பானின் பங்களிப்போ 23.1 விழுக்காடாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் 4.14 பில்லியன் பேர் வாழ்கின்றனர். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 54.8 விழுக்காடாகும். இது 2000ஆம் ஆண்டில் 56 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon