மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

நர்சிங்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

நர்சிங்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த நர்சிங் மற்றும் பார்மசி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிஏஎஸ்எல்பி, பிசியோதெரபி, பிஎஸ்சி ரேடியாலஜி, பிஎஸ்சி கார்டியோ புளுமோனரி பெர்புயூஷன் டெக்னாலஜி உள்ளிட்ட ஒன்பது விதமான படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பாராமெடிக்கல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று (செப்டம்பர் 10) தொடங்கியது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிஎஸ்சி நர்சிங், பார்மசி உள்ளிட்ட படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பம் விநியோகப்படுகிறது. இந்த மருத்துவப் படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் 400 ரூபாய்க்கான கேட்பு வரைவோலையை இணைத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளர், தேர்வுக் குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010 என்ற முகவரிக்கு, வரும் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon