மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

தல தளபதிக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி: அப்டேட் குமாரு

தல தளபதிக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி: அப்டேட் குமாரு

நம்ம மீம் கிரியேட்டர்ஸுக்கு கீர்த்தி சுரேஷ் மேல என்ன காண்டுன்னு தெரியல. பொதுவா எந்த கதாநாயகிக்கும் இவ்வளவு மீம் வந்ததில்லை. அப்படியே வந்துருந்தாலும் எதையாவது பேசத் தெரியாம பேசி மாட்டியிருந்துருப்பாங்க. இவங்களும் ரெண்டு நாள் மீம் போட்டு அனுப்பியிருப்பாங்க. ஆனால் எதைப்பத்தியும் பேசாத கீர்த்தியை ஏம்பா இப்படி கலாய்க்குறீங்க. முகத்துல கெத்து காட்டாம இயல்பா முக பாவங்களை காண்பிச்சிருச்சு. அது வடிவேலு ஃபேஸ் ரியாக்‌ஷன் மாதிரி இல்லாட்டாலும் ஓரளவுக்கு அதுக்கு பக்கத்துல நெருங்குறதால வகையா செய்யுறாங்க. வழக்கமா தல தளபதி கேங்க் தனியா நின்னு கமெண்ட்ல மோதிக்குவாங்க, கீர்த்தி விஷயத்துல சேர்ந்து நின்னு களமாடுதாங்க. இந்த மீம் எல்லாத்தையும் அவங்க பார்த்துட்டாங்கன்னா இனி யாருக்கும் பேட்டியே கொடுக்கமாட்டங்க.. சரி அப்டேட்டை பாருங்க, அவங்கட்ட எடுத்து சொல்லிட்டு வாரேன்.

@Kozhiyaar

மறக்கவே முடியாது என்று நினைத்த சில உறவுகளை, நினைக்கவே முடியாமல் செய்து விடுகிறது இந்த கொடும் வாழ்க்கை!!!

@yaar_ni

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் காந்தி

மோடி நவ் : நாக்குல fracture

@gips_twitz

உரையாடல் மூலம் அதிகாரிகள் இந்தியை பரப்ப வேண்டும் - பிரதமர் மோடி

பேங்க்ல ஹிந்தில இருக்குற செலான்லையே தமிழ்ல எழுதுறவங்க நாங்க, எங்ககிட்டையேவா

@navnetha

கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கோம்னு நினைச்சு லைட்டா சந்தோசப்படும்போது 'அப்பிடியெல்லாம்

சந்தோசப்படாதே'ன்னு சொல்லி ஆரம்பிச்ச இடத்திலேயே இழுத்திட்டு வந்து போட்ருது பிளடி லைஃப்.

@VegaMcHrt91

அண்ணா பிரபலம் னா யாரு அண்ணா???

அதுவாமா நாம அனுப்புற மெசேஜ் பார்த்தும் ரிப்ளை பண்ணாம தான்உண்டு தன் வேலை உண்டுனு இருப்பாங்கமா அவங்கதான்மா

பிரபலம்

@nandhu_twitts

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க தயார் - சரத்குமார்

அந்த மனுசன் கொஞ்சமா நடமாடிட்டு இருக்காரு அது பொறுக்கலையா உங்களுக்கு..!!

@HAJAMYDEENNKS

வரும் இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க !

@Thaadikkaran

'சீமராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை!' - உயர் நீதிமன்றம் உத்தரவு# தமிழ் ராக்கர்ஸ் அட்மின் இந்நேரம் சிரித்து கொண்டிருப்பார்..!

@Thaadikkaran

"பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது, பணம் இல்லையே!" - ஜெயக்குமார்

பணம் மனம் குட் காம்பினேஷன்..!

@divakarantmr

இறுக்கமான சில தருணங்களை கடப்பதற்கு போலியாய் சில புன்னகைகள் அவசியமாகிறது!

@rahimgazali

எந்தெந்த முறையில் மலிவு விலையில் பெட்ரோல், டீசல் தர முடியுமோ, அதை செய்து வருகிறோம் - தமிழிசை..

ஸ்யப்பா... ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் என்பது மலிவு விலைன்னா காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட மலிவா கொடுத்தபோது ஏன் பெட்ரோல் விலை பயமுறுத்துதுன்னு பஞ்ச் பேசினீங்க?

@abuthahir707

ஒரு செமஸ்டெர்க்கு கட்டும் பணம் கூட இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு வேலையில் சேரும் போது கூட கிடைப்பதில்லை

@rahimgazali

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வேலுமணி

அழகிரி மேலே நீங்க வச்சிருக்க பாசத்தை கண்டு இந்நேரம் அழகிரிக்கே கண்ணு வேர்த்திருக்கும்.

@ajmalnks

பல ஆபாச வெப்சைட்களை தடைசெய்யும் அரசு அதேபோல் டிக்டாக்,மியூசிக்கலி போன்ற ஆப்களையும் தடை செய்வது சமுதாயத்திற்கு நல்லது.

@chithradevi_91

பொறுமை என்பதை கற்றுக்கொள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் ஒரு அக்கவுண்ட் தொடங்கச் சென்றாலே போதுமானது.

@sultan_Twitz

குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பாசிச பாஜக ஆட்சி ஒழிக ன்னு சொன்னா ஒழிஞ்சுடுமா அப்புறம் ஏன் தூக்கி உள்ள போட்டீங்க!!

@rahimgazali

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க தயார்-சரத்குமார்

ஜெயிச்சா யாரு முதல்வருன்னு பிரச்சனை வந்திடாம பார்த்துக்கங்க?!

@sultan_Twitz

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் வேலுமணி

இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது!!

@ajmalnks

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.-கடம்பூர் ராஜூ

யார்கிட்டண்ணே தெரிவிச்சாரு?-மக்கள்

கண்ணாடி முன்னாடி நின்னுதான்.-கடம்பூர்.

-லாக் ஆஃப்

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon