மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

பால்வளத் துறையால் விவசாயிகள் பயன்!

பால்வளத் துறையால் விவசாயிகள் பயன்!

விவசாயிகள் செழிப்புடன் இருக்க வேண்டுமானால் பால்வளத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தால் பயிலரங்கு ஒன்று தொடங்கப்பட்டது. பால் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் தொழில்நுட்ப அம்சங்களுக்கான இந்தப் பயிலரங்கை மத்திய வேளாண் துறை அமைச்சரான ராதா மோகன் சிங் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கிராமப்புறங்களில் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இது ஒட்டுமொத்த வேளாண் துறையின் வளர்ச்சிக்கும் உதவும். பால் விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைத் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் உறுதிப்படி, கண்டிப்பாக 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும். ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு 2018 மார்ச் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.686 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. பால் மாடுகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் முனைப்பில் இதுவரையில் 1,831 காளை மாடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால், 2,200 காளை மாடுகளை வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பால் உற்பத்திக்காக 9 கோடி பசு மாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon