மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

பயணிகள் வாகன விற்பனை மந்தம்!

பயணிகள் வாகன விற்பனை மந்தம்!

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை 2.46 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2017ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,94,416 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2018 ஆகஸ்ட்டில் 2,87,186 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 2.46 சதவிகிதம் சரிவாகும். கார் விற்பனையைப் பொறுத்தவரையில், 1.03 சதவிகித சரிவுடன் மொத்தம் 1,96,847 கார்கள் ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2017 ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 1,98,892 ஆக இருந்தது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் 6.18 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, விற்பனை எண்ணிக்கை 11,36,322லிருந்து 12,06,512 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகன விற்பனை 2.91 சதவிகிதம் (19,46,811 வாகனங்கள்) உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 65,350லிருந்து 84,668 ஆக அதிகரித்துள்ளது. இப்பிரிவில் அதிகபட்சமாக 29.56 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 23,81,931 வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon