மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

89 வயதில் பிஹெச்டி!

89 வயதில் பிஹெச்டி!

கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவின் கொப்பல் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரான சரண பசவராஜ் பிசரஹல்லி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பெருமையும் இவருக்குண்டு.

சரண பசவராஜ் பிசரஹல்லி, கொப்பல் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி என்று சொல்லலாம். ஹம்பி பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியத்தில் இவர் ஆய்வுப்படிப்பை மேற்கொள்ள விருப்பம் கொண்டிருக்கிறார். இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்விலும், இந்த 89 வயது முதியவர் கலந்துகொண்டிருக்கிறார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய பிசரஹல்லி, கடந்த ஆண்டு எழுதிய நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றதாகக் கூறினார். ஆனால், இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார். “இந்த முறை எல்லாமே நன்றாக இருந்தது. நம்பிக்கையுடன் தேர்வை முடித்துள்ளேன். கன்னட கவிதைகள் மற்றும் இலக்கியப் புத்தகம் எழுதவும் ஆர்வம் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர், தார்வாட் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் இவர் சட்டம் பயின்றுள்ளார். அதோடு, ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது