மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

மழலைகளின் சரணாகதி!

 மழலைகளின் சரணாகதி!

பால் குடிக்கும் மழலையின் மலத்தை நாம் அருவெறுப்பின்றி சுத்தம் செய்வது மாதிரிதான், நமது மனங்களில் இருக்கும் மல எண்ணங்களை சாய்பாபா சுத்தம் செய்கிறார் என்று நாம் பார்த்தோம். நம் மனதில் இருந்து கெட்ட எண்ணங்களை அப்புறப்படுத்தும் அன்னையாகத் திகழ்கிறார் அக்கரைப்பட்டி சாய்பாபா.

சாய்பாபா நாம் எல்லாரும் குழந்தைகள்தான் என்பதை எடுத்துக் காட்டும் விதமாய், சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.\

அந்த சாயியின் சத்வார்த்தைகள் சிலவற்றை ஸ்ரீ சாயி சரித்திரத்தில் இருந்து புரட்டித் தருகிறோம். சாய்பாபாவின் இந்த வார்த்தைகள் அக்கரைப்பட்டி பாண்டு ரங்க பொது நல வளாகத்தில் இருக்கும் பலராலும் உச்சரிக்கப்பட்டவை, உச்சரிக்கப்படுகிறவை. உதட்டால் உச்சரிக்காமல் உள்ளத்தால் உச்சரித்தால் இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்வைத் தொடும் என்பதை தாங்கள் உணரலாம்.

இதோ அந்த வார்த்தைகள்...

“அன்புக் குழந்தையே” என்று ஆரம்பிக்கிறார் பாபா. 80 வயது கிழவனும, எட்டு மாத சிசுவும் அவருக்கு ஒன்றுதான். எல்லாரும் சாய்பாபா என்னும் தாய்பாபாவின் அருள் மடியில் குழந்தைகள்தான்.

“விடியலை பார்க்க தவித்துக் கொண்டு ஏங்கி இருந்த காலத்தில் இருந்து உன்னை மீட்டு அழைத்துச் செல்ல போகிறேன். தயாராக இரு. என்னிடம் கேட்ட விஷயங்களுக்கு மனதில் இருந்த வலியால் மனம் வெறுத்து போய் நீ பரிதவித்த விஷயங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்க போகிறது. போகும் பாதை எப்படி என்று தானே கேட்கிறாய்?

நம் பாதையில் நீ பயப்படும் அளவிற்கு அங்கே உன்னை காயப்படுத்த யாரும் இல்லை. நீயும் யாரையும் காயம் படுத்தவும் முடியாது ஏனென்றால் உன்னுடன் நான் இருக்கிறேன் பச்சை நிறமுடைய பசுமையான நிலங்கள் போல் தான் உன் பயணம் ஆரம்பிக்கும். உன் நிம்மதியும் சந்தோஷமும் அழகாய் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை போல் மலர்வாய்.

உன் வெற்றிகள் நீரருவி போல் பொங்கி எழுந்து உயர்ந்து நிற்பாய். உன் தந்தையான நான் உன்னை விட்டு எங்கே போவேன்?” என்கிறார் சாய்பாபா.

அது மட்டுமா... அவர் சொல்லும் கம்பீர அழகைப் பாருங்கள்.

“நிமிர்ந்து நிற்க பழகி கொள் ஏனென்றால் இனிமேல் அது தான் உன் காலம். நீ போராடிய காலத்தை மறவாதே, நீ கஷ்டத்தில் கற்ற பாடத்தை மறந்துவிடாதே. இவைதான் உன்னை நல்ல மனிதராய, மனுஷியாய் உருவாக்கும்.

என் செல்ல குழந்தை எப்படி பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தேனோ அது எல்லாம் நடக்க போகிறது. என் வார்த்தைகள் உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும். அந்த சொற்களின் பேரருளை பெறுவாய்.

நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். உலகத்தில் எது மாறினாலும் நகன்றாலும் நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன்.

உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிவேன். நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்” என்று தொடர்ந்து போகின்ற சாயியின் சத்வார்த்தைகள்.

அந்த அருட்தந்தையின் சேவடிகளில் இந்த மழலைகளின் சரணாகதியை வைப்பதை அன்றி நமக்கு வேறு வழியில்லை... அவனை அன்றி ஒளியில்லை! சாயி சாயி

(பாபா பரவசம் தொடரும்)

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon