மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள் 73 பேர் கொலை!

தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள் 73 பேர் கொலை!

தகவல் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர்கள் 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அரசு சாரா நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் செயல்படும் காமன்வெல்த் என்ற மனித உரிமை அமைப்பு இன்று(செப்டம்பர் 10) பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அப்போது அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு ஊழல்களை அம்பலப்படுத்துவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை (whistle blowers act) அமல்படுத்தும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது. அதே போன்று தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று (செப்டம்பர் 9) கேதர் சிங் ஜிந்தன் என்ற தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டார். அவருடன் சோ்த்து, இதுவரை தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தில் சிரமாவூர் மாவட்டத்திலுள்ள பாக்ராஸ் கிராமத்தில் வசித்து வரும் கேதர் சிங் ஜிந்தன், தலித் மக்களின் தலைவராகவும் இருந்து வந்தார். சிம்லாவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பல கோடி சொத்துக்கள் உள்ள 6 குடும்பங்கள் வறுமைக்கோட்பாட்டிற்கு கீழ் வாழ்வதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பேசியுள்ளார்.

இதனைப் பயன்படுத்தி, அவர்கள் அரசு வேலையும் பெற்றுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அந்த குடும்பங்கள் அடியாட்களைக் கொண்டு அடித்து, அவர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்துள்ளனர்.

தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 419 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிந்தன் மீது நடந்தது 420வது தாக்குதல் ஆகும். அவரையும் சேர்த்து கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. எனவே தகவல் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக இருக்கின்ற சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon