மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

விலை உயர்வு: தீர்வு எங்கள் கையில் இல்லை!

விலை உயர்வு: தீர்வு எங்கள் கையில் இல்லை!

விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு தங்கள் கைகளில் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திவருகின்றன. இதனால் பல தரப்பட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வைக் கண்டித்து இன்று (செப்டம்பர் 10) நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றுவருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

மேலும் மத்திய அரசு விதித்துள்ள வரிகளைத் திரும்பப் பெற்றாலே பெருமளவில் விலை குறையும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துவருகின்றன.

பாரத் பந்த் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “பாரத் பந்திற்கு மக்கள் எதிர்ப்பாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் இந்த தற்காலிக விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமில்லை என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது” என்று தெரிவித்தார்.

“அனைவரும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் இன்று நடந்தது என்ன?. பெட்ரோல் குழாய்கள் வெட்டப்படுகின்றன, பேருந்துகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. உயிர்களுக்கு அச்சுருத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. பிகாரின் ஜகன்பாத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆம்புலன்சுக்கு வழிவிடாததால், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தை இறந்துவிட்டது. இதற்கு யார் பொறுப்பு?. காங்கிரஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும்”என்று தெரிவித்தார்.

பாரத் பந்த் வெற்றிபெறவில்லை. இது காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளிடைய பதற்றத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். நாட்டு மக்களிடையை அச்சத்தை உருவாக்குவதற்காக வன்முறையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் மக்களுக்குத் துணையாக நிற்கிறோம். ஆனால் பெட்ரோல், விலை உயர்வுக்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon