மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இளைஞர்கள்!

வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இளைஞர்கள்!

இந்தியர்களில் 22 முதல் 37 வயது வரையிலான இளையோர்கள் வீடு, வாகனம் மற்றும் பயணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக ’பேங்க் பஜார்’ தலைமை நிர்வாக அதிகாரி அடில் செட்டி கூறியுள்ளார்.

டி.என்.என். ஊடகம் சார்பாக அடில் செட்டியிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், பேங்க் பஜார் நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை எட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து எதைக் கற்றீர்கள், எது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று கேட்டதற்கு, “22 முதல் 37 வயதுக்குட்பட்டவர்களிடம் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்ற முனைப்பு அதிகமாக உள்ளது. இந்த வயதுடையவர்களில் பெரும்பாலானவர்கள் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். இதிலிருந்து மேம்படுத்திக் கொள்ளவே இவர்களுக்குக் கடன் வசதிகள் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி பயணங்கள் மேற்கொள்வதையும் இவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சிறு கடன்கள் பெறுவது எந்த அளவுக்கு தற்போது எளிதாகியுள்ளது? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “காகிதமில்லா சிறு கடன் ஒப்புதல்கள் இன்று எளிதாகக் கிடைக்கின்றன. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகக் கடன் நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கிகள் மோசடிகளைக் கண்டறிவது மற்றும் ஆவணங்கள் மோசடி குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளன. டிஜிட்டல் மயமாக்கல், சரிபார்ப்பு, கடன் செயலாக்கங்கள் ஆகியன தவறுகள் மற்றும் மோசடிகளைக் கண்டறிய உதவுகின்றன. கடன் நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்துகின்றன. ரூ.25,000, ரூ.50,000 எனச் சிறு கடன்களைக் கூட கடன் நிறுவனங்கள் வழங்குகின்றன” என்றார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon