மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

என்னது மோடி காங்கிரஸ்காரரா: அப்டேட் குமாரு

என்னது மோடி காங்கிரஸ்காரரா: அப்டேட் குமாரு

இவ்வளவு நாளா பெட்ரோல் விலை ஏறும் போது கலாய்ச்சு மீம் போட்டுகிட்ட இருந்த நம்ம பசங்க முகத்துல இப்ப ஒரு பயம் தெரிய ஆரம்பிச்சுருச்சு. 82, 83ன்னு தாண்டி போய்கிட்டு இருக்குறதால இனி தப்பிக்க வழி இல்லைன்னு ரூட்டை மாத்த ஆரம்பிச்சிட்டாங்க. பேரிடர் காலங்கள்ல எப்படி நம்மளை தற்காத்துக்கனும்னு கிளாஸ் எடுப்பாங்களோ அது மாதிரி பெட்ரோல் இல்லாம எப்படி சமாளிக்கனும்னு மீம் போட்டு கிளாஸ் எடுக்கிறாங்க. என்ன நடந்தாலும் சும்மா கல்லு மாதிரி நின்னு கலாய்ச்சுகிட்டு இருந்தவங்களையே இப்ப ஆட்டிப்பார்த்துட்டாங்க. அப்டேட்டை பாருங்க, நான் நடையை கட்டுறேன், இப்ப நடக்க ஆரம்பிச்சாத்தான் பத்து மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியும்.

@rahimgazali

இனிமேல் பழைய கிழிந்த 200 மற்றும் 2000 ருபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினால் அவற்றுக்கு பாதி மதிப்பு மட்டுமே உங்களுக்கு அளிக்கப்படும் - ரிசர்வ் வங்கி

எந்த அளவுக்கு மக்களிடம் சுரண்ட முடியுமோ அந்த அளவுக்கு சுரண்ட ஆரம்பித்துவிட்டது வங்கிகளும், அரசும்.

@Kozhiyaar

கண் முன்னே நடப்பதை நம்ப மாட்டார்கள்!

ஆனால் காலேண்டர்ல போட்டு இருக்கிறது நடக்கும்னு நம்புவார்கள்!!

@BlackLightOfl

பசுமையை இழந்து உதிர்ந்து, காற்றில் பறக்கும் காய்ந்த சருகு கர்வத்துடன் தான் கேட்கிறது, "நான் வீழ்வேன் என நினைத்தாயோ.?"

@rahimgazali

"பெட்ரோல் விலை உயர்விற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் பாஜக அல்ல” -தமிழிசை

என்னது மோடி காங்கிரஸ்காரரா?

@Kozhiyaar

நம்ம கஸின் குடும்ப வாட்ஸ் அப் க்ருப்ல போட்டுட்டு உடனே அழித்த செய்தி என்னவாக இருக்கும் என்று குறுகுறுப்பு அனைவருக்கும் இருக்கும்!!!

@sendil

இந்தியாவை புரட்டி போடபோகும் மோடியின் 7C திட்டம்… மீண்டும் ஒரு புதிய இந்தியாவிற்கு வாய்ப்பு - செய்தி

போதும் குருநாதா , நீங்க நாட்டுக்காக உழைத்தது எல்லாம் போதும் !!

@Thaadikkaran

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைப்பு; விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

- அப்படியே மைக்கே OPS அய்யாகிட்ட கொடுங்க..!!

@Kozhiyaar

மோடிக்கு மட்டும் வருஷத்திற்கு எவ்வளவு நாள் லீவு கிடைக்குது இல்லப்பா!?

மோடிக்கு லீவா?

ஏன் அப்படி கேட்கிறீங்க?

லீவு விட்டா ஃபாரின் டூர்லாம் போக முடியும்!?

ஙே...

@ShivaP_Offl

பரபரப்பாக இருந்தாலே பாதிசோகம் கண்ணுக்கு தெரியாது,

சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்தசோகமும் நெருங்கி வராது!!

@Thaadikkaran

ஸ்கூலுக்கு போற குழந்தையை சரியா படிக்கிறது இல்லேன்னு சொன்ன பெற்றோரைவிட சரியா சாப்பிடறது இல்லேன்னு சொன்ன பெற்றோரே அதிகம்.!

@kaleeswaran_18

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை டாலரின் மதிப்பு தான் உயர்ந்துள்ளது - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தட் இவர் பந்தை பிடிக்கவில்லை பந்துதான் இவரைப் பிடித்துள்ளது மொமன்ட்

@gips_twitz

பெட்ரோல் விலை உயர்விற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் பாஜக அல்ல - தமிழிசை

அதாவது போன தேர்தல்ல காங்கிரஸ் ஜெயிச்சுருந்தா இப்படி ஒரு கொடுமை நடந்துருக்காதுனு அக்கா சொல்லுது...

@chithradevi_91

குழந்தையாய் இருந்தபோது எப்ப பெரியவங்களாவோம்னும் பெரியவங்க ஆன பிறகு குழந்தையாவே இருந்திருக்கலாம்னும் ஏங்குபவர்கள் மனிதர்கள் மட்டுமே.

@amuduarattai

செய்தி: ரபேல் போர் விமான விலை திடீரென உயர்ந்தது எப்படி? # காங்கிரஸ்.

பஞ்ச்: ஃபோர்ப்ஸ் பீரங்கி வாங்கிய போது உயர்ந்தது போல தான்.

@Thaadikkaran

சம்பளம் வாங்குனதும் செலவு பண்ணிட்டு, மாசகடைசில பிடிச்சதுகூட வாங்கி சாப்பிட முடியாதபோது 'ஆடிய ஆட்டம் என்ன' பாட்டு கண்ணு முன்னாடி வந்திட்டு போகுறது தவிர்க்க முடில..!!

@kumarfaculty

சத்தியமாக என்றால் உண்மையாகவா என்றும், உண்மையாக என்றால் சத்தியமாகவா என்றும் கேட்கும் உலகம்...!!!

@Kozhiyaar

ஓரே பேனாவை எத்தனை நாட்கள் பயன்படுத்துகிறோம் என்பதில் தெரிந்து விடுகிறது நம் பொறுப்புத்தன்மை!!!

@gips_twitz

பேஸ்புக்கில் வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மார்க் ஜூக்கர்பெர்க்

உண்மையா அவரே சொன்னாரா இல்ல இதுவும் வதந்தியா ...

-லாக் ஆஃப்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon