மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

இசைவாரா இமான்?

இசைவாரா இமான்?

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிம்பு நடித்த வாலு மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றி முழுமையாகப் படக்குழு அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இசையமைக்க டி.இமானுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தனது முந்தைய இரு படங்களுக்கும் தமனை இசையமைத்திட வைத்திருந்தார் விஜய் சந்தர். தற்போது இமான் இதற்கு இசையமைக்கும்பட்சத்தில் முதன்முறையாக இமானுடன் இணைவார் விஜய் சந்தர். அஜித்துடன் முதன்முறையாக இணைந்திருக்கும் விஸ்வாசம் மற்றும் சீமராஜா போன்ற படங்களில் இமான் பிசியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon