மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஆக்‌ஷன் மோடில் காளிதாஸ்

ஆக்‌ஷன் மோடில் காளிதாஸ்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மீன்குழம்பும் மண்பானையும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் காளிதாஸ். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்கத்தில் இவர் மலையாளத்தில் படம் நடிக்கவுள்ளது குறித்த அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. மூன்று மாதங்களுக்கு மேலாக ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் இதன் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 9) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த தகவலை காளிதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றி, “ஜீது ஜோசப் இயக்கத்தில் எனது அடுத்த படம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் உடன் விண்டேஜ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. உங்களது பிரார்த்தனையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் ஒரு பக்க கதை படத்தில் நடித்து முடித்திருக்கிறார் காளிதாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. பிரேமம், நேரம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்திலும் காளிதாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர இரு மலையாளப் படங்கள் காளிதாஸ் கைவசம் உள்ளன.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon