மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

டெல்லியில் விரைவில் இ-பேருந்துகள்!

டெல்லியில் விரைவில் இ-பேருந்துகள்!

டெல்லியில் அடுத்த ஆண்டு முதல் மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று மரக்கன்றுகளை நட்டு மாபெரும் மரம் நடும் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "இ-பேருந்துகளை (மின்சாரப் பேருந்து) இயக்கும் திட்டம் தயாராக உள்ளது. அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சீன நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் சோதனை ஓட்டத்துக்கான பேருந்துகளை வழங்க உறுதியளித்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் செப்டம்பர் மாத நடுவில் தொடங்கப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2000 தாழ்தள பேருந்துகளைப் புதிதாக வாங்க டெல்லி அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்ற அதற்கு இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு 500 பேருந்துகளை வாங்க அனுமதி கிடைத்தது. மேலும் தடையை நீக்ககோரி உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்குமாறும் உச்சநீதிமன்ற பரிந்துரைத்தது. எனவே உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டு தடையை விலக்கி, 2000 பேருந்துகளை வாங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்லியில் 4000 சாதாரண பேருந்துகளும், 1612 தாழ்தள சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது டெல்லியில் உள்ள மக்கள் தொகைக்கு குறைந்தது 11,000 பேருந்துகளாவது தேவை என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon