மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சேலம்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

சேலம்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளும் பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பிருந்தாவனச் சாலையில், ஏகா என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில், தலைமை மருத்துவர் பிரபகாரன் அம்மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதனை செய்துகொண்டிருந்தார்.

இன்று மதியம் குளிர்சாதனப் பெட்டியொன்றை மருத்துவமனை ஊழியர் ஒருவர் இயக்கினார். அதில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட மருத்துவரும் நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். மருத்துவமனையிலிருந்த தீ அணைப்புச் சாதனங்களைக் கொண்டு நெருப்பை அணைக்க ஊழியர்கள் முயன்றனர்.

தகவலறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள், உடனடியாகத் தீயை அணைத்தனர். இந்த விபத்தினால், அம்மருத்துவமனை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. மருத்துவனையில் உள்நோயாளிகளாக இருந்த 14 பேரும், ஆம்புலன்ஸ் மூலம் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. தற்போது, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon