மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

திருச்சி திருப்பத்தை தருமா?

திருச்சி திருப்பத்தை தருமா?

சிவகார்த்தி மார்கெட்: களநிலவரம் ஒரு அலசல் - 4

சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களைக் காட்டிலும் சீமராஜா படத்துக்கு அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரெமோ, வேலைக்காரன் இரு படங்களுக்கும் இதே போன்று எதிர்பார்ப்பும், விளம்பரமும் இருந்தது. எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. விநியோக அடிப்படையில் படங்களை வாங்கியதால் நஷ்டம் இன்றி தப்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். திரையரங்குகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.

தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சி ஏரியாவில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர் அரியலூர், திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய ஏரியா திருச்சி விநியோகப் பகுதி. அதிக மாவட்டங்கள் இருந்தாலும் திரையரங்குகள் குறைவு. திருச்சி ஏரியா நான்கு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுமார் 45 திரையரங்குகளில் சீமராஜா திரையிடும் வாய்ப்பு இருப்பதால் அட்வான்ஸ் 4 கோடி ரூபாய் தியேட்டரில் இருந்து விநியோகஸ்தருக்கு கிடைக்கும். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களில் ரஜினி முருகன் தான் 4 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்ற படம்.

வேலைக்காரன், ரெமோ இரு படங்களும் 3.50 கோடி ரூபாய் வருமானத்தைக் கடக்கவில்லை. சுமார் 6 கோடி ரூபாய் மொத்த வசூலானால் 4 கோடி ரூபாய் அசல் தேறும்.

ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் வசூலை சீமராஜா கடக்குமா திருச்சி சிவகார்த்திகேயனுக்கு திருப்பத்தைத் தருமா?

செப்டம்பர் 13 வரை காத்திருப்போம்.

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon