மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: முட்டை கீமா!

கிச்சன் கீர்த்தனா: முட்டை கீமா!

சாதம், பூரி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சைடிஷ்ஷாக சாப்பிடக்கூடிய உணவு முட்டை கீமா. இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

முட்டை - 2

ஃப்ரெஷ் பட்டாணி - அரை கப்

தக்காளி - 1

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

பிரியாணி இலை - 1

பட்டை - 1 இன்ச்

லவங்கம் - 2

அன்னாசிப்பூ - 1

பெரிய வெங்காயம் - 1

செய்முறை

முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடங்களில் முட்டைகள் வெந்து விடும்.

வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவில் முட்டையைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ போட்டு வதக்கவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் ஃப்ரெஷ் பட்டாணி சேர்த்துக் கிளறவும். பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள் மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவலைச் சேர்க்கவும். இறுதியில் மல்லித்தழைச் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கீமா ரெடி!

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon