மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பண்டிகைக் காலத்தில் குவியும் மக்கள்!

பண்டிகைக் காலத்தில் குவியும் மக்கள்!

இந்த ஆண்டின் பண்டிகை சீசனின் போது ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 2 கோடிக்கும் மேலான மக்கள் ஷாப்பிங் செய்வார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் சந்தை ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட மிகப் பெரிய ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் அடுத்த மாதம் தொடங்கும் பண்டிகைக் கால விற்பனையில் 3 பில்லியன் டாலர் வரையில் வருவாய் ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் பண்டிகைக் கால விற்பனையின் போது 1.3 கோடி முதல் 2.4 கோடி வரையிலான மக்கள் ஆன்லைன் வாயிலாக ஷாப்பிங் செய்தனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு விற்பனையில் சுமார் 2 கோடிப் பேர் ஆன்லைன் ஷாப்பிங் வாயிலாகத் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

பண்டிகை சீசன் விற்பனையின் போது மக்களைக் கவர அதிக அளவிலான சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், விரைவில் பொருட்கள் டெலிவரியும் செய்யப்படும் என்பதால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வதுண்டு. குறிப்பாக ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும். இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிக்கும். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தைச் சமீபத்தில் வால்மார்ட் வாங்கியுள்ளதால் இந்த ஆண்டின் பண்டிகைக் கால விற்பனை இன்னும் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon