மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் : தினகரன்

இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் : தினகரன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ள டி.டி.வி. தினகரன், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “பெட்ரோல், டீசல் விலை உயர்வில்தான் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. தமிழக அரசு மது விற்பனையில் ஆட்சி செய்கிறது. ஏழை எளிய சாதாரண மக்கள் வாழ வேண்டுமானால் பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டும். மத்திய அரசு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும்.

உலகத்தமிழர்கள் அனைவரும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். தமிழக ஆளுநர் அதை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி. எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் இதை நான் சொல்லவில்லை. இந்த ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த ஆட்சி யாரால் நடக்கிறது என்பதை தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். பா.ஜ.க.வுடன், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது தேவையற்ற அரசியல்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். 2 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon