மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

மாணவர்களைக் குறிவைக்கும் ஜெயம் ரவி

மாணவர்களைக் குறிவைக்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு படத்தின் ‘ஆங்கு வாங்கு’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் என்றால் கடந்த தலைமுறை கதாநாயகர்களில் விஜயகாந்த், அர்ஜுன் பெயர்கள்தான் உடனடியாக நினைவுக்கு வரும். இளம் தலைமுறை நாயகர்களில் அந்தப் பெயரை ஜெயம் ரவி விரைவில் பெற்றுவிடுவார் எனலாம். ராஷி கண்ணாவுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அடங்க மறு திரைப்படமும் காவல்துறையை மையமாக வைத்து உருவாகிவருகிறது. கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அவரது ஒப்பனிங் பாடலான ‘ஆங்கு வாங்கு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்காக சென்னையில் உள்ள நான்கு கல்லூரிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மாணவர்களைக் கவரும் விதமாக அந்தந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவரும் போது ஏற்படும் சத்தத்தை நினைவுபடுத்தும் விதமாக ‘டிஸ்கியான்’ என்ற வார்த்தை பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு

சாரு கேத்த லோக்கல் சாங்கு

கூட சேர்ந்து பாடலைன்னா டிஸ்கியான்

ஜாடி ஜோடி அகிலி காடி

சைடு மோளம் டிபன்னு மூடி

சாரு கூட ஆடலைன்னா டிஸ்கியான்

பிஸ்டல் காட்டி மெர்சல் ஏத்தும்

ஜேம்ஸ் பாண்டோட ரவுடிதனம்

பண்ணினாக்க தோல உறிப்பான் டா”

என பாடல் வரிகளை லோகன் எழுதியுள்ளார். ஜெயம் ரவியின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஆங்கு வாங்கு லிரிக்கல் வீடியோ

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon