மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சீனாவால் உயர்ந்த புண்ணாக்கு ஏற்றுமதி!

சீனாவால் உயர்ந்த புண்ணாக்கு ஏற்றுமதி!

சீன நாட்டுக்கான இந்தியாவின் புண்ணாக்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளதால் இந்தியாவின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி 21 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே மூண்டுள்ள வர்த்தகப் போரால் சீனா தனது வர்த்தக உறவை இதர நாடுகளுடன் வலுப்படுத்தி வருகிறது. சீனாவுக்குத் தேவையான புண்ணாக்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புண்ணாக்குக்கு சீனா விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இந்தியாவுக்கான சுகாதாரப் பாதுகாப்பு தர நிலைச் சான்றுகளை சீனா தளர்த்தியுள்ளதால் இந்தியாவின் புண்ணாக்கு ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியாவின் சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா மொத்தம் 11,92,095 டன் அளவிலான புண்ணாக்கை ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 9,86,606 டன் அளவிலான புண்ணாக்கை விட இது 21 சதவிகிதம் கூடுதலாகும். இந்த ஆண்டுக்கான ஏப்ரல் - ஆகஸ்ட் ஏற்றுமதியில், அதிகபட்சமாகக் கடுகு புண்ணாக்கு 4,90,232 டன் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. சோயாபீன் புண்ணாக்கு 3,71,769 டன்னுக்கும், தவிடு புண்ணாக்கு 1,79,537 டன்னுக்கும், ஆமணக்குப் புண்ணாக்கு 1,49,952 டன்னுக்கும், நிலக்கடலைப் புண்ணாக்கு 605 டன்னுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon