மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

கோலி இதற்கு சரிப்படமாட்டார்: வான்

கோலி இதற்கு சரிப்படமாட்டார்: வான்

ரிவ்யூவை பயன்படுத்துவதில் உலகிலேயே மிக மோசமாக செயல்படுபவர் கோலிதான் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வான் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என இந்தியா இழந்துவிட்ட நிலையில், ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இந்தியா களமிறங்கியுள்ளது. 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய கேப்டன் விராட் கோலி, தன்வசம் இருந்த இரு ரிவ்யூ வாய்ப்புகளையும் தவறான அப்பீல்களுக்கு வீணடித்தார்.

10ஆவது ஓவரின் போது ஜடேஜா வீசிய பந்து கீட்டன் ஜென்னிங்ஸின் கால் பட்டையில் பட்டதும் கோலி அதனை ரிவ்யூவுக்காக அப்பீல் செய்தார். ரிப்ளேயில் அது ஸ்டம்பை விட்டு விலகிச் சென்றது தெரியவந்ததால் அந்த வாய்ப்பு வீணானது. அடுத்த வாய்ப்பு 12ஆவது ஓவரில் அலெஸ்டர் குக்கிற்காக பயன்படுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டது. கோலியின் இந்தச் செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து வான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ரிவியூவை பயன்படுத்துவதில் கோலி உலகிலேயே மிகவும் மோசமானவர்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon