மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

அஞ்சல் துறைக்குக் காப்பீட்டு நிறுவனம்!

அஞ்சல் துறைக்குக் காப்பீட்டு நிறுவனம்!

இந்திய அஞ்சல் துறை, காப்பீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியா போஸ்ட் பரிவர்த்தனை வங்கியை இந்திய அஞ்சல் துறை தொடங்கியது. இந்த வங்கியைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். நாட்டிலுள்ள அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த அமைப்பையும் பயன்படுத்தி சாதாரண மனிதர்களுக்கும் வங்கிச் சேவைகளைக் கொண்டுசேர்ப்பதே இந்தியா போஸ்ட் பரிவர்த்தனை வங்கியின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், காப்பீட்டு நிறுவனம் ஒன்றையும் நிறுவுவதற்கு அஞ்சல் துறை திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா, எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “அஞ்சல் துறை தற்போது மறுபிறவி எடுத்து வருகிறது. பார்சல் இயக்குநரகம், இந்தியா போஸ்ட் பரிவர்த்தனை வங்கி என ஏற்கெனவே அஞ்சல் துறை தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் சிறப்புத் தொழில் நிறுவனமாகக் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தை அமைப்பதற்கு ஆலோசனை நிறுவனத்தை நியமிப்பதற்கான முன்மொழிதல் அடுத்த வாரத்தில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon