மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பிரபஞ்ச அழகி மறைவு!

பிரபஞ்ச அழகி மறைவு!

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற செல்ஸி ஸ்மித்தின் மறைவுக்கு பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த செல்ஸி ஸ்மித் வென்றார். 1994ஆம் ஆண்டு அதே பட்டத்தை வென்ற சுஸ்மிதா சென் அவருக்குக் கிரீடம் சூட்டி கௌரவித்தார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த செல்ஸி ஸ்மித் தனது 43ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 8) மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களையும் அவருக்கு நெருக்கமானவர்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது.

செல்ஸி ஸ்மித் மறைவு குறித்து அவரது தோழியான சுஸ்மிதா சென் இரங்கல் பதிவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “அவரது சிரிப்பையும், மற்றவர்களுக்காக இயங்கக்கூடிய மனதையும் விரும்புகிறேன். எனது அழகான தோழியின் ஆன்மா அமைதியாகுக” என்று பதிவிட்டுள்ளதுடன், செல்ஸி ஸ்மித்துக்கு கிரீடம் அணிவித்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

1995ஆம் ஆண்டு சிறந்த அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சன்னா மோக்லருக்கு செல்ஸி ஸ்மித் கிரீடம் சூட்டி கௌரவப்படுத்தினார். இவரது மறைவுக்குச் சன்னா மோக்லரும் தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். “என் இதயம் நொறுங்கிவிட்டது. எனது தோழியாகவும் எனது ஒளியாகவும் இருந்தார். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் உனை காணாது தவிப்பேன் அதை இனி நீ ஒருபோதும் உணரமுடியாது. அரசிக்கான இலக்கணம் நீ” என்று உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon