மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

வல்லபாய் படேல் சிலை: அக்.31இல் மோடி திறந்து வைப்பு!

வல்லபாய் படேல் சிலை: அக்.31இல் மோடி திறந்து வைப்பு!

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 31ஆம் தேதி திறந்துவைக்க இருப்பதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி டெல்லி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் 182 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி முடிவு செய்திருந்தார்.

ரூ.2000 கோடி மதிப்பில் இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தச் சிலையை அமைப்பதற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து மண் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தச் சிலை வரும் அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படும். இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நேர்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கு ஒருமைப்பாட்டுச் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பணி கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon