மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

தேயிலை உற்பத்தியில் பின்னடைவு!

தேயிலை உற்பத்தியில் பின்னடைவு!

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 5.1 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

2017 ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் இந்தியா மொத்தம் 615.51 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டின் அதே காலத்தில் தேயிலை உற்பத்தி 583.84 கிலோ மட்டுமே. இது 5.1 சதவிகிதம் குறைவாகும். அளவு அடிப்படையில் 31.67 கிலோ குறைவான அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 151.38 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2017 ஜூலை மாத உற்பத்தி 162.28 மில்லியன் கிலோவாக இருந்தது.

பாதகமான வானிலை நிலவியதால் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தேயிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி 477.96 மில்லியன் கிலோவிலிருந்து 462.39 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் 137.55 மில்லியன் கிலோவிலிருந்து 121.45 மில்லியன் கிலோவாக உற்பத்தி சரிந்துள்ளது. இந்த விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய தேயிலை வாரியம், 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி 1,290 மில்லியன் கிலோவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் உற்பத்தி 1,322 மில்லியன் கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon