மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பல் மருத்துவப் படிப்பு: இறுதிக் கட்ட கலந்தாய்வு!

பல் மருத்துவப் படிப்பு: இறுதிக் கட்ட கலந்தாய்வு!

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவப் படிப்புக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது அரசு ஒதுக்கீட்டில் 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 569 இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. இந்நிலையில் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் உள்ள 833 இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.

இந்த இடங்களில் சேர, இதுவரை விண்ணப்பிக்காதோரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 207 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குக் காலை 10 மணிக்குக் கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குப் பிற்பகல் 2 மணிக்குக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, உரிய சான்றிதழ்களுடன் மாணவர்கள் வளாகத்திற்கு வந்து சேர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon